2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

கசிப்புடன் பெண் கைது

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, சித்தாண்டி பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரைக்கமைய, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர்  சுற்றி வளைவைப்பின்போதே, பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 14,000 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .