Freelancer / 2022 ஜூன் 17 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் தற்காலிக வீடொன்றில் (16) வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ பரவலினால் குறித்த தற்காலிக வீடு எரிந்து சேதமடைந்துள்ளது.
கர்பலா வீதி பாலமுனை 10 இலுள்ள இந்த தற்காலிக வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் உறவினர் வீடொன்றுக்கு சென்றிருந்த சமயம் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அயலவர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைத்துள்ளனர்.
மேலும், வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், உடைமைகளும் சேதமடைந்துள்ளன.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், பொலிஸார் சம்ப இடத்துக்கு சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
27 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
52 minute ago