2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கதவடைப்பு போராட்டத்தால் மட்டு. மாநகர சபை செயலிழந்தது

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர் ஒருவர் மாநகர மேயரால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கோரி, இன்று (11) காலை முதல் மட்டக்களப்பு மாநகர சபையின் வாயில் கதவினை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக, மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகள் இன்று முற்றாக தடைப்பட்டதுடன், மாநகர சபையின் உத்தியோகத்தர்களும் உள் செல்ல அனுமதிக்கப்படாத காரணத்தால் மாநகர சபை முற்றாக செயலிழந்தது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவனிடம் கேட்டபோது, “மாநகர சபையின் செயற்பாடு அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக எவரும் வேலை நிறுத்தம் செய்யமுடியாது.

“எனவே, வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும் என்பதுடன், மாநகர சபையின் செயற்பாடுகளை சுமுகமான நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

“ஏற்கெனவே மாநகரசபையின் ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பிழையான முறையில் வழங்கப்பட்ட நியமன கடிதத்தை வாபஸ்பெற்றுக்கொண்டு, ஊழியர்கள் அனைவரையும் கடமைக்கு அழைக்குமாறு மாநகரசபை ஆணையாளருக்கு உள்ளுராட்சி ஆணையாளரால் அறிவுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

“மாநகரசபை ஆணையாளரும் வேலை நிறுத்ததில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பதாக எழுத்துமூலமாக அறிவித்துள்ளார். எழுத்துமூலமாக அறிவித்துவிட்டு இன்று கதவு அடைக்கப்பட்டுள்ளது.

“இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பிரதி ஆணைளாரை உடனடியாக கதவை திறந்து அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும்,ப கிஸ்கரிப்பில் உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

“மாநகரசபையில் இயல்பு நிலையை ஏற்படுத்தவேண்டிய தேவையுள்ளது. உள்ளுராட்சி அதிகாரசபைகளின் செயற்பாடுகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒருவரும் வேலை நிறுத்தம் செய்யமுடியாது.

“வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படுவதுடன் சுமுகமான நிலையை ஏற்படுத்த நடவடிக்கையெடுக்கப்படும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .