2022 ஓகஸ்ட் 12, வெள்ளிக்கிழமை

இயந்திரம் அன்பளிப்பு

Freelancer   / 2022 ஜூன் 07 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு போட்டோ கொப்பி இயந்திரம் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு திங்கட்கிழமை நேற்று (6) இடம்பெற்றது. 

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த, எம்.ஏ.முகம்மது உசனார் என்பவர் அன்பளிப்பு செய்த போட்டோ கொப்பி இயந்திரத்தை வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர்,  உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஜாபீர் கரீம், பிரதி அதிபர் எஸ்.பாறூக் கான் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஐ.எம்.பஸீல், உறுப்பினர் ஏ.எம்.நியாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .