2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

கலன்களில் பெற்றோல் விநியோகம்

Freelancer   / 2022 ஜூன் 13 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்  

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று  (12) மாலை கலன்களில் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.

ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலேயே இவ்வாறு பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.   

கலன்களுக்கு பெற்றோல் வழங்குவது கடந்த சில காலமாக தடை வீதிக்கப்பட்டிருந்தது. 

எனினும், மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்)  பாவனையாளர்கள் மற்றும் தொழிற்சாலைத் தேவையுடையோரின் நன்மை கருதி, இவ்வாறு கலன்களில் பெற்றோல் வழங்கப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .