Freelancer / 2022 ஜூன் 15 , பி.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துவிட்டு, பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச் சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள, மகழடித்தீவு காளிகோவில் வீதியிலுள்ள, குறித்த இளம் குடும்பமான கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், அதிகாலை 4 மணிக்கு தனது மனைவியின கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தனது இரண்டரை வயது குழந்தையை தூக்கி கொண்டு தனது சகோதரியின் வீட்டிற்கு கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு, பொலிஸ் நிலையத்தில் பிற்பகல் 12 மணியளவில் சரணடைந்துள்ளார்.
இதில் கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் எனவும், இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
40 minute ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
8 hours ago
9 hours ago
9 hours ago