Princiya Dixci / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் இன்று (14) அதிகாலை 1 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில், வீடொன்றில் கசிப்பு உற்பத்தியை முன்னெடுத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
50,000 மில்லி லீற்றர் கசிப்பு, 40,000 மில்லிலீற்றர் கோடா மற்றும் கசிப்பு தயாரிக்கும் பெருமளவு உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக, மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.
கிடைக்கப் பெற்ற தகவலொன்றையடுத்தே, கிரானிலுள்ள குறித்த வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், கசிப்பைக் கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025