2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வலையில் சிக்கிய ரி56 துப்பாக்கி மீட்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, கல்லடி, திருச்செந்தூர் கடற்கரையில் ரி56 ரகத் துப்பாக்கியொன்று, நேற்று முன்தினம் (12) மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

திருச்செந்தூர் கடலில் கரை வலை மீன்பிடியில் அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வலையில் குறித்த துப்பாக்கி சிக்கியுள்ளது.

அது தொடர்பில், காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .