2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் நபர் மரணம்; காத்தான்குடி நபர் கைது

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

இம்மாதம் 3ஆம் திகதி விபத்துக்குள்ளான ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (10) உயிரிழந்தார்.

இந்த விபத்துத் தொடர்பாக காத்தான்குடியைச் சேர்ந்த ஓட்டோ சாரதியை, ஏறாவூர் பொலிஸார் நேற்று (11) கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஏறாவூர் நபர், வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் கொண்டிருந்த போது மாடு குறுக்கிட்டமையால் எதிரே வந்த ஓட்டோவில் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X