2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

அங்கர் பால்மாக்களை பதுக்கி வைத்த வர்த்தக நிலையம் சிக்கியது

Freelancer   / 2022 ஜூன் 19 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எச்.எம்.எம்.பர்ஸான்)

பழைய விலைகளான 540 மற்றும் 790 ரூபாய்கள் பொறிக்கப்பட்ட அங்கர் பால்மாக்களை பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையமொன்றை மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் இன்று (19) சுற்றிவளைத்தனர்.

பழைய விலை பால்மாக்களை புதிய விலைகள் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சாதாத் தலைமையிலான நுகர்வோர் அலுவல்கள் அதிகாரிகள் சுற்றிவளைத்தனர். 

இதன்போது கைப்பற்றப்பட்ட அங்கர் பால்மாக்கள் பொறிக்கப்பட்ட விலைக்கு அதிகாரிகள் முன்னிலையில் விற்பனை செய்யப்படடமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .