2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் 42 தொற்றாளர்கள்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் நேற்று சனிக்கிழமை 75 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் சுவாமி இருவர் உட்பட 42 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து,  மிஷன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் நேற்று (07) பல பகுதிகளில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்  தெரிவித்தார்.

இதன்போது, மாமாங்கம் பகுதியில் 21தொற்றாளர்களும் புளியந்தீவு பகுதியில் 09 தொற்றாளர்களும், நாவற்குடா கிழக்குப் பகுதியில் 12 தொற்றாளர்களும், மஞ்சந்தொடுவாய் பகுதியில் 06 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X