Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக யுத்த காலத்தில் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை, ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்துககு அமைவாக, அக்காணிகளின் உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகிறன.
இதனடிப்படையில், மட்டக்களப்பு, கும்புறுமுலை பகுதியில் நீண்ட காலமாக இராணுவ முகாம் அமையப்பெற்றிருந்த சுமார் 12 ஏக்கர் காணி, நேற்று முன்தினம் (03) அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையேற்றிருந்தார்.
நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கலந்துகொண்டு, மாவட்டச் செயலாளரிடம் காணிப் பத்திரத்தை கையளித்ததுடன், மாவட்டச் செயலாளர், அதை உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .