2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

நான்கு மீனவர்களை 15 நாள்களாக காணவில்லை

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்த 4 மீனவர்கள் தொடர்பில் இன்று (10) 15ஆவது நாளாகவும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் படகின் உரிமையாளர் எம்.எஸ்.அன்வர், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி, வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த படகிலிருந்து இன்று வரை எந்தவித அறிவித்தலும் தமக்கு கிடைக்கவில்லை என்று படகின் உரிமையாளர், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

நீலநிற குறித்த படகில் வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.வி.ரிஸ்கான், எம்.எச்.முஹம்மட், ஏ.எம்.றியாழ் மற்றும் கே.எம்.ஹைதர் ஆகியோர் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடற்படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மீன்படித் திணைக்களம் என்பன இணைந்து காணாமல் போன படகு தொடர்பான தேடுதலை ஆரம்பித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .