2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

கொரோனா மரணங்கள் வீழ்ச்சி; நல்லடக்கமும் குறைகின்றது

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

நாட்டில் கொரோனா மரணங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தற்போது நாளொன்றுக்கு 5 முதல் 10 வரையான உடல்களே, ஓட்டமாவடி – மஜ்மா நகர் மையவாடியில் நல்லடக்கத்துக்கு வருவதாக, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் மஜ்மா நகர் மையவாடியில், நேற்று புதன்கிழமை (13) வரை 3,120 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில், கடந்த 7 ஆம் திகதி 5 உடல்களும், 8 ஆம் திகதி 9 உடல்களும், 9ஆம் திகதி 2 உடல்களும், 10ஆம் திகதி 1 உடலும், 11ஆம் திகதி 4 உடல்களும், 12ஆம் திகதி 6 ஆறு உடல்களும், 13ஆம் திகதி 1 உடலும் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதில், நாளொன்றில் ஆகக் குறைந்த உடல் 13ஆம் திகதி ஒரு உடலும், ஆகக் கூடிய உடல்கள் நல்லடக்கம் 8ஆம் மாதம் 23ஆம் திகதி 57 உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .