2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

Freelancer   / 2022 ஜூன் 16 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கனகராசா சரவணன்) 

மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குடியிருப்பு ஆற்றில் தோணி ஒன்றில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை (16) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மயிலம்பாவெளி துரைச்சாமி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சிறீதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வழமைபோல சம்பவதினமான நேற்று புதன்கிழமை மாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறி மீன்பிடிப்பதற்காக குறித்த ஆற்றில் தோணியில் தனியாக சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து,  உறவினர்கள் அவரை தேடிய நிலையில் இன்று வியாழக்கிழமை (16) காலையில் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதில் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .