2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கல்லடி பால வாவியை நீந்திக் கடந்த இளைஞன்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

உலக உளநல ஆரோக்கிய தினம், ஒக்டோபர் 10ஆம் திகதி (இன்று) அனுஷ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகிலுள்ள வாவியை இளைஞர் ஒருவர் நீந்திக் கடக்கும் நிகழ்வு, நேற்று (09) இடம்பெற்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த 20 வயதுடைய அமலநாதன் சஞ்சீவன் எனும் இளைஞனோ இவ்வாறு கல்லடி பாலத்தின் மட்டக்களப்பு நகர் பக்கமாக இருந்து கல்லடி பக்கமாக நீந்திச் சென்று, உடல் உள ஆரோக்கியம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

மேற்படி இளைஞன் நீந்துவதற்கான நடவடிக்கைக்கு ஆரம்பத்தில் பொலிஸார் அனுமதி மறுத்ததுடன், பின்னர் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னாயத்தங்களை பரிசீலனை செய்த பின்னர் பொலிஸார் அனுமதியளித்துள்ளனர்.

தற்போதைய கொவிட் தொற்றுக் காலத்தில் அனைவரும் உள நலத்தையும் உடல் நலத்தையும் பேண வேண்டும் எனவும் இதுவரை கல்லடி பாலத்தில் சுமார் 30 பேர் குதித்து தற்கொலை செய்துள்ளதாகவும் இவ்வாறான தவறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக் கூடாது எனும் தகவலை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சர்வதேச உள நல ஆரோக்கிய தினத்தில் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவே இந்த நீச்சல் நடவடிக்கையை தான் மேற்கொண்டதாக அமலநாதன் சஞ்சீவன் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .