Freelancer / 2022 ஜூன் 19 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் நிலையினை கருத்திற்கொண்டு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எரிபொருள் பாவனையாளர்களுக்கு புதிய நடைமுறையில் எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடலின் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேச மக்களுக்கு திங்கட்கிழமை முதல் இலகுவான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு கிராம சேவையாளரினால், அட்டவணைப்படுத்தப்பட்ட அட்டை முறையில் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்குவது தொடர்பாக பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுடான கலந்துரையாடல் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி கலாரஞ்சனி கணேசலிங்கம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் உட்பட மட்டக்களப்பு பெற்றோலியம் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago