Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2022 மே 12 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர், புன்னைக்குடா வீதியை அண்டி அமைந்துள்ள மூன்று ஆடைத் தொழில்சாலைப் பணியாளர்கள் சுமார் 500 பேர், இன்று (12) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மூன்று ஆடைத் தொழில்சாலைகளும் கடந்த செவ்வாய்க்கிழமை (10) வன்முறைக் கும்பலால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த அதி நவீன ஆடைத் தொழில் இயந்திரங்கள், மின் பிறப்பாக்கிகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உட்பட ஏனைய உபகரணங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் வியாழக்கிழமை தளர்த்தப்பட்டதையடுத்து ஆடைத் தொழில்சாலைக்கு மீண்டும் பணிக்குத் திரும்பிய பணியாளர்கள், தொழில்சாலை சேதமாக்கி அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, சம்பந்தப்பட்ட வன்முறையாளர்களைக் கைது செய்து செய்யுமாறு கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
“நீதி நிலைநாட்டப்பட வேண்டும்”, “ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் வன்முறையாளர்களை கைது செய்”, “அரசியலுக்கும் ஆடைத் தொழிற்சாலைக்கும் வித்தியாசம் தெரியாதா?” உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பினர்.
போராட்ட இடத்துக்கு வந்த பொலிஸாரும் படையினரும் கவன ஈர்ப்பாளர்களின் கோரிக்கையை ஏற்பதாகவும் முன்னதாகவே வன்முறையில் ஈடுபட்டோரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் பலரைக் கைது செய்யும் தமது நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்புக் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து கவனயீர்ப்புப் போராட்டக்காரர்கள் தமது தொழிற்சாலைகளுக்குச் சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago