2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

‘படகு விபத்து; பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்’

Editorial   / 2021 நவம்பர் 24 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அச்சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட பொதுச் செயலாளருமான பொன்னுத்துரை உதயரூபன், இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தப் படகு விபத்தில் மாணவர்கள் உட்பட ஆசியர் ஒருவரும் பலியானதையிட்டு, எமது ஆசிரியர் சங்கம் சார்பில் ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சம்பவத்துக்கு அரசு முழுமையான பொறுப்யை ஏற்க வேண்டும்.

“நீர் வழிப் பயணங்களை மாணவர்கள் மேற்கொள்ளும் பொது, இந்தப் பாதையை சரியான முறையில் சீர் செய்து கொடுத்திருப்பின், அந்த மாணவர்கள் பாதுக்காப்பான முறையில் பயணத்தை மேற்கொண்டிருக்கலாம்.

“கிழக்கு மாகாண ஆளுநர் இந்த சம்பவத்துக்கு நீதியான விசாரணையொன்றை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

“மட்டக்களப்பிலும் பல பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவ்வாறான பயணத்தினூடாவே பாடசாலைகளுக்குச் செல்லுகின்றனர்.

“எனவே, நிலைபேறான அபிவிருத்தி விடயத்துக்கு முன்னுரிமை கொடுத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்குரிய முழுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X