2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

பெண் பொலிஸ் அதிகாரிகள் மீது பாலியல் சேட்டை

Freelancer   / 2022 ஒக்டோபர் 27 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் 

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல்  தொல்லை கொடுத்து வந்த  பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை  கைது செய்ததுடன், அவர் கடமையில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில்  கடமையாற்றி வந்த அம்பாறை மாவட்டத்தைச் சோந்த பொலிஸ் சார்ஜன்ட் அங்கு கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் சேட்டையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள்  முறைப்பாடு தெரிவித்ததை அடுத்து பொலிஸ் சார்ஜனிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அவரை நேற்று கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்தார். 

இதனையடுத்து அவரை கடமையில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X