2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

சேதன விவசாய உர உற்பத்திக்கு இயந்திரங்கள்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

சேதன விவசாய உர உற்பத்தியை விரிவுபடுத்தும் திட்டத்துக்கமைய, கிழக்கு மாகாண விவசாய சேவைகள் மத்திய நிலையங்களுக்கு கொம்போஸ்ட் மூலப்பொருள்களை துண்டாக்கும் இயந்திரங்கள்  வழங்கிவைக்கப்பட்டன.

மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் பணிப்புரையின் பேரில் முன்னெடுக்கப்படும் இதன் ஆரம்ப நிகழ்வு, மாகாண பிரதம செயலாளர் துசித்த பி வணிகசிங்க தலைமையில், மாகாண விவசாய பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக 44  இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் 14 விவசாய நிலையங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 11 மற்றும் அம்பாறை மாவட்டத்துக்கு 10 என இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

சேதனப் பசளையை பிரபலப்படுத்தும் முகமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்துக்காக ஒதுக்கிய நிதியின் மூலமே இந்த இயந்திரங்கள் 55 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளன.  

மாகாணத்தில் உள்ள அனைத்து விவசாய மத்திய நிலையங்களுக்கும் இயந்திரங்களை பெற்றுக்கொடுக்க ஆளுநர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X