Freelancer / 2022 ஜூன் 07 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு நிருபர், எஸ்.எல்.நௌபர் )
இந்திய தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகள் மண்முனைப்பற்று பிரதேச செயலப் பிரிவில் நேற்று (06) திகதி முதல் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கென முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள 50000 பக்கட் அரிசி மற்றும் 3750 பக்கட் பால்மா என்பனவற்றை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிற்கும் முன்னுரிமையடிப்படையில் மாவட்ட செயலகத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 350 குடும்பங்களுக்கு சர்வோதயம் அமைப்பின் அனுசரனையில், இன்று (7) மூதூர் பிரதேச செயலகத்தில் வைத்து மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இங்குள்ள 42 கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கே இவ் இலவச உலருணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன .

6 minute ago
21 minute ago
25 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
25 minute ago
35 minute ago