Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 07 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபரை, கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை - கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்பாக வைத்து நேற்றிரவு (06) சந்தேகநபர் கைதானார்.
இவ்வாறு கைதான நபர், காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், சந்தேகநபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 4 கிராம் 770 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பின்னர் கைதுசெய்யப்பட்ட நபரின் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் காத்தான்குடி பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன், விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்பு பட்ட சந்தேக நபர் இப்பிராந்தியத்தில் போதைப்பொருள் முகவராக செயற்பட்டு வந்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .