2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

ஐஸ் போதைப்பொருள், கசிப்புடன் மூவர் கைது

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கசிப்புடன் மூவர், இன்று (31) காலை கைது செய்யப்பட்டுள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் 581 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், மற்றுமொருவரிடம் 550 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், மற்றுமொருவரிடமிருந்து ஒரு போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .