Princiya Dixci / 2022 ஜூலை 06 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நள்ளிரவில் காட்டு யானையால் வீடு உடமைகள் சேதமாக்கப்பட்டு, நாம் தெய்வாதீனமாக உயிர் தப்பினோம். ஆயினும், இது பற்றி அதிகாரிகளுக்கு அறிவித்தும் எவரும் வந்து பார்வையிடவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பஸ்தரான நாகலிங்கம் சத்தியநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கோப்பாவெளி எனும் கிராமத்திலுள்ள சத்தியநாதனின் வீடு கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானையால் சேதமாக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்துவிட்ட போதிலும் பொலிஸாரோ, வன ஜீவி அலுவலர்களோ பிரதேச செயலக அதிகாரிகளோ எவரும் வந்து பார்வையிடவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். இதற்கு தற்போதைய எரிபொருள் நெருக்கடியே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இச்சம்பவம் இடம்பெற்றபோது தமது குடும்பம் காட்டு யானையின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கூக்குரலிட்டதும் உதவிக்கு விரைந்த அயலவர்களின் உதவியுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பிப் பிழைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கோப்பாவெளி, கித்துள், பெரியபுல்லுமலை கிராமங்களில் தற்போது காட்டு யானைகள் ஊடுருவுதல் வழமையான ஒரு நிகழ்வாக மாறிவிட்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 26ஆம் திகதி கித்துள் பிரதேசத்தில் மாட்டுப் பண்ணை உள்ள இடத்துக்குச் சென்ற கூலித் தொழிலாளி ஒருவர் மீது காட்டு யானை தாக்கியதில் அவர் ஒரு காலை இழந்துள்ளார்.
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago