2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் நடமாடிய மூவர் கைது

Niroshini   / 2016 ஜூலை 25 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பள்ளியடி வீதியில் கஞ்சாவுடன் நடமாடிய மூன்று இளைஞர்களை ஞாயிற்றுக்கிழமை(24) இரவு,
கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடம் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே குறித்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 18, 20 மற்றும் 22 வயது நிரம்பியவர்கள் எனவும் இவர்கள் ஏறாவூர் - 2, பள்ளியடி வீதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யபட்டவர்களிடமிருந்து 4,500 மில்லிகிராம்;, 4,300 மில்லிகிராம்; மற்றும் 8,000 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .