Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
அரசாங்க வாகன சாரதிகளின் திறமையினை விருத்திசெய்வதற்கான இருநாள் செயலமர்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஐ.எம்.கருணாரட்ன கலந்துகொண்டார்.
இங்கு கருத்து வெளியிட்ட அவர், திறமையான முறையில் பயிற்சிகளைப்பெற்று நல்லவிதமாக வேலைசெய்பவர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மரியாதை செலுத்தப்படுகின்றது. அதுபோன்றதொரு சேவையினை நீங்கள் வழங்க வேண்டும். நீங்களும் நாங்களும் மக்களுக்கு சேவையாற்றவே அரசசேவையில் உள்ளோம். நாங்களும் உங்களுடனேயே தங்கியிருக்கிறோம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
உதாரணமாக ஒரு பிரமுகரை அழைத்துச் செல்லும்போது பாதுகாப்பு வழங்குவது எங்களது பணியாக இருந்தாலும் வாகனச்சாரதியான நீங்கள் சரியாகசெயற்பட்டால் தான் குறித்த நேரத்துக்குள் அந்தக்கடமையை நிறைவுசெய்ய முடியும் என்றார்.
கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த செயலமர்வினை இதன் பணிப்பாளர் திவாகர சர்மா ஒருங்கிணைக்கிறார்.
இச்செயலமர்வில் வாகன போக்குவரத்து பிரிவு பரிசோதகர் ரி.சிவயோகன், மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் தொழில் நுட்ப பொறியியலாளர் எம்.குகன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
8 hours ago