2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

சுனாமி, யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயதொழில் கடனுதவி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ், றிபாயா  நூர்)

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களின் சுயதொழில் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக மண்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட  60 பேருக்கு சுயதொழில் கடனுதவி வழங்கும் நிகழ்வு கிழக்கிலங்கை மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினால் (எகெட்) நடத்தப்பட்டது.

தெரிவுசெய்யப்பட்ட தர்மபுரம், செலவநகர் கிழக்கு, ஆரையம்பதி கிழக்கு, கிரான்குளம், ஆகிய பகுதிகளைச்சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

மீன்பிடி, கோழிவளர்ப்பு, ஆடுவளர்ப்பு, பயிர்ச்செய்கை, சிறுகடை வியாபாரம், உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவதற்காக இந்தக் கடனுதவிகள் வழங்கப்பட்டதாக எகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

15 இலட்சம் ரூபா பெறுமதியான இந்தக் கடனுதவிகளை எகெட் பணிப்பாளர் கலாநிதி சிறிதரன் சில்வெஸ்ரர் வழங்கிவைத்தார். இதேவேளை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 17 இலட்சம் பெறுமதியான உதவுத் தொகைகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .