2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

கப்பம் கோரிய சி.வி.எவ்.. படைவீரர் விளக்கமறியலில்

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(சிஹாரா லத்தீப்)

மட்டக்களப்பு வவுணதீவு பருத்திச்சேனை பகுதியில் சில்லறைக்கடையில் 500 ரூபா கப்பம் கோரிய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய சி.வி.எவ். படைவீரரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி வீ.ராமக்கமலன் உத்தரவிட்டார்.

குறித்த சி.வி.எவ் படை வீரர் கடந்த 29ஆம் திகதி பகல் பருத்திச்சேனையில் உள்ள சிறிய கடையொன்றில், மோட்டார்  சைக்களில் சென்று பெற்றோல் கேட்டு வாங்கிக் கொண்ட பின் தான் பொலிஸ் உத்தியோகத்தர் என்று பாசாங்கு செய்து சட்டவிரோத பெற்றோல் விற்பனை கண்டுபிடிக்க வந்ததாகக் கூறி பயமுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கடையிலுள்ள பணப் பொட்டியில் பலவந்தமாக 500 ரூபா பணம் அபகரித்துக் கொண்டதாக வவுணதீவு பொலிஸ் பருத்திச்சேனைப் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த படை வீரரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி ராமக்கமலன், அன்றைய தினம் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு பொலிஸாரை பணித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .