Menaka Mookandi / 2011 மார்ச் 29 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)
நாம் எம்மைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டுமாக இருந்தால் கல்வியில் போட்டி போட்டு முன்னேற வேண்டும். முன்பு தமிழர்கள் கல்வியில் முன்னிலையில் இருந்ததால் சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்களை சிங்களவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் வைத்திருந்தனர். அதனாலேயே சேர்.பொன்.இராமநாதனை தேசியத் தலைவராகப் பார்த்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, திரேசாக் கொண்மனற் பாடசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியில் இருந்து கொள்வனவு செய்த நிழல் பிரதி இயந்திரத்தை கையழிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மட்டு - அம்பாறை மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய சுவாமி கிஞ்சிலி சுவாமிப்பிள்ளையும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இன்று எமது சமூகத்தின் கல்வி மிகவும் பின்நோக்கிச் சென்றுள்ளது. கடந்த அரச நிருவாக சேவைப் பரீட்சையில் ஒருவர் கூட எடுபடவில்லை. அதற்குக் கூறிய காரணம் பரீட்சையில் சித்தியடையவில்லை என்பதாகும். அந்த அளவிற்கு கல்வி பின்நோக்கிச் சென்றுள்ளது.
காரணம் 30 வருட யுத்தத்தின் தாக்கம் படுவாங்கரைப் பகுதியில் மோசமாக உள்ளது. இப்பகுதியில் இருந்த அனைத்துப் பொருளாதாரமும் யுத்தத்தினால் அழிந்துள்ளது. அதற்கு அப்பால் கடந்த வெள்ளம் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் அழித்தள்ளது. மாவட்டத்தின் பொருளாதாரத்தை பாதுகாக்கின்ற மக்கள் வறுமையில் வாழ்பவர்களாகவே உள்ளனர்.
இதனால் அப்பகுதிப் பெற்றார் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்புகின்றனர் இதனால் கல்வி பின்னடைந்து கொண்டே செல்கின்றது. இதனால் மாவட்டத்தின் கல்வி பாதிக்கின்றது. மாவட்டத்தின் கல்வியை உயர்த்த அனைவரும் அற்பணிப்புடன் செயற்பட வேண்டும். மாணவர்கள் போட்டி மனப்பாங்குடன் கல்வினைத் தொடர வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago