2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

லிபியா மீதான தாக்குதலை எதிர்த்து ஏறாவூரில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் லிபியா மீது மேற்கொண்டு வரும் தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேச முஸ்லிம்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜும்ஆ கூட்டுத்தொழுகையின் பின்னர் நடைபெற்ற இவ் ஆர்ப்பட்டத்தில் பெரும் எண்ணிக்கையான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்கா மற்றும் நேற்றோ படையினரை கண்டிக்கும் வாசகங்களைக் கொண்ட பல்வேறு சுலோகங்களை ஏந்திச் சென்றனர். மீரா ஜ}ம்ஆ பள்ளிவாசல் முன்றலில் இருந்து ஆரம்பமான இவ்வார்ப்பாட்டம் காதியார் வீதியூடாக சென்று ஏறாவூர்பிரதேச செயலகத்தை அடைந்தது.

வை.எம்.எம்.எ கிளையினால் ஐக்கியநாடுகள் செயலாளருக்கு முகவரியிடப்பட்டு தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்றும் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக இம் மகஜர் அனுப்பப்பட உள்ளதாக வை.எம்.எம்.எ அமைப்பின் இணைச் செயலாளர் தெரிவித்தார்.

'முஸ்லீம்களை கருவறுக்கும் நேட்டோவே உன் அதிகார வெறிக்கு முஸ்லீம்களா இலக்கு', 'அரபு உலகமே அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்ப இன்னும் ஏன் தயக்கம்', 'ஏகாதியபத்திய வாதிகளே ஈரக்கில் கற்றபாடம் இன்னும் போதாதா' போன்ற வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .