2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

மாடுகள் திருடிய குற்றச் சாட்டில் மூவர் கைது

Kogilavani   / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வாகனேரி – கொட்டக்குளம் என்ற பிரதேசத்தில் மாடுகளைத் திருடியக் குற்றச்சாட்டில்  மூன்று பேரை  சந்தேகத்தின்  பேரில்   கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.எம்.பி. ஜயவீர தெரிவித்தார்.

வாகனேரிப் பிரதேசத்தில் இருந்து குறித்த மாடுகளை விற்பனைக்காக ஓட்டமாவடி - காவத்தமுனை பிரதேசத்திற்கு கொண்டு சென்ற வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் இம் மூவரையும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .