Kogilavani / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.ஜெஸ்மின்)
தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பொது மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையில் விசேட பஸ் சேவைகளை ஏற்படுத்த கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து கிழக்கு மாகாணத்திற்கு வரும் பயணிகள் தத்தம் வீடுகளுக்கு செல்வதற்கும் புதுவருட விடுமுறை முடிந்ததும் தமது கடமைகளுக்காக மீண்டும் செல்வதற்கும் வசதியாக இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் நடாத்தப்படவுள்ளன.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து கொழும்பு, காலி, மாத்தறை, கண்டி உட்பட தூர இடங்களுக்கு செல்வதற்கான பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதுடன் இரவில் பிரயாணிகளின் நலன் கருதி பஸ் நிலையங்களில் நிலவும் மின்சாரம், நீர் மற்றும் மலசலகூடங்களில் நிலவும் குறைபாடுகள் அனைத்தும் சீர் செய்யப்படுவதுடன் பிரயாணிகளுக்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எச்.உதயகுமார் தெரிவித்தார்.
இதேவேளையில் அம்பாறை நகரிலிருந்து பிரதான நகரங்களுக்கு விசேட பஸ் சேவைகளை நடாத்துவதற்கு 55 பஸ்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் சேவையில் ஈடுபடுவதற்காக சாரதிகளும் நடத்துனர்களும் தியாக மனப்பாங்குடன் செயற்பட இருப்பதாகவும் திணைக்களத்தின் அம்பாறை பிரதேச பொறுப்பதிகாரி எச்.ஹர்பட் டி சேரம் தெரிவித்தார்.
11 minute ago
14 minute ago
19 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
19 minute ago
23 minute ago