2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம்

Editorial   / 2022 ஜனவரி 10 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48ஆவது நினைவு தினம், அம் மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின்  நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இன்று (10) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.கே சிவாஜிலிங்கம் உட்பட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்களை கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது, வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .