2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

கோவிலுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி

Niroshini   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த், எஸ். நிதர்ஷன்

 வல்லிபுர ஆழ்வார் கோவில், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் ஆகியவற்றுக்குள், சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சி என்பவரே, இவ்வாறு மத நியதிகளை மீறி, கோவில்களுக்குள் சப்பாத்துடன் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு, இன்று (13) நண்பகல் வருகை தந்துள்ள பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, வல்லிபுர ஆழ்வார் கோவில், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் ஆகியவற்றுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், கோவில் வெளி வீதியில் சப்பாத்துகளை கழற்றிவிட்டு, கோவில்களுக்குள் சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாத்திரம் சப்பாத்துகளை கழற்றாது, கோவில்களுக்குள் சென்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X