2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடித்து விளையாடிய சிறுவன் பலி

Niroshini   / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். தில்லைநாதன்

தோட்டக் கிணற்றில் மீன்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று, நாச்சிமார் கோவிலடி, திக்கம் பகுதியில், இன்று (19) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த நியாந்தன் தித்திஸ்குமார் (வயது 08) என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

வீட்டுக்கு பின்புறமாக உள்ள தோட்டத்தில் சிறுவன் பட்டம் ஏற்றி கட்டிவிட்டு, தோட்டக் கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்து விளையாடியுள்ளார்.

அச்சமயம் சிறுவன் கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அச்சிறுவனுடன் கூட இருந்த சிறுமி ஒருவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, உறவினர்கள் சிறுவனை மீட்டு ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .