2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தர் கொலை; மற்றுமொருவர் கைது

Niroshini   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்  தில்லைநாதன் 

அரியாலை - பூம்புகார் பகுதியில்,  சனிக்கிழமை (18) இரவு, ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயது குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,   மற்றுமொரு சந்தேக நபரொருவர், நேற்று (19) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன் தொடர்புடைய பூம்புகாரைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவரின் மனைவி (வயது 28) வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில்,    இவர்   கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியுடன் குறித்த இளைஞனுக்கு இருந்த தொடர்பு தொடர்பில் எழுந்த பிரச்சினை முற்றியே, குடும்பத்தலைவரை கொலை செய்யும் முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது என்று, யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் இணைந்தே குடும்பத்தலைவரை கொலை செய்துள்ளனர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .