2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

குருநகரிலும் 16 பேர் சிக்கினர்

Niroshini   / 2021 ஜூன் 14 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

குருநகர் பகுதியில்,  இன்றைய தினம் (14) இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

குருநகர் பகுதியில், இன்று (14), ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் பொலிஸார், அப்பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் அதிகளவானவர்கள்; கலந்துகொண்டிருந்ததை அவதானித்து, அது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து, அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர், 15 பேருக்கும் அதிகளவானவர்கள் இந்தத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததை உறுதிப்படுத்தி, அங்கிருந்த 16 பேரையும தனிமைப்படுத்தினர்.

நாடு முழுவதும் பயணக் கட்டுபபாடு விதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில், 15 பேருக்குட்பட்டு திருமண நிகழ்வை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதும், அதற்கு மேலதிகமாக அங்கு பலரும் ஒன்றுகூடியதால், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர் என, யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .