2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

புனிதநகரில் இரவிரவாக வாள்வெட்டு

Niroshini   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன்

 பருத்தித்துறை - கற்கோவளம், புனிதநகர் பகுதியில், நேற்று (10) பிற்பகல் 02 மணியில் இருந்து இரவிரவாக வாள்வெட்டுக் குழுக்களால் பெரும் அட்டகாசம் செய்யப்பட்டுள்ளது.

இதில், மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஐந்து வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துகளும் நாசம் செய்யப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல், கற்கோவளம் - புனிதநகர் பகுதியில், போதையில் ஒருசிலர் சண்டித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள ஒருசிலர், குறித்த நபர்களை தமது வீட்டுக்கு முன்னால் நின்று சத்தம் போட வேண்டாம் என்று தெரிவித்ததை அடுத்து, குறித்த நபர்கள் பிற இடங்களில் இருந்தும் அவ்வூரில் இருந்தும் வாள்வெட்டு குழுக்களை அழைத்து, அப்பகுதியில் உள்ள ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், அவ்வீடுகளில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் உட்பட் பெறுமதியான பொருள்களையும் சேதமாக்கியுள்ளனர்.

இதையடுத்து. இச்சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர், பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர், அத்துடன், அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவம், விசேட அதிரடி படை குவிக்கப்ட்டே, வாள்வெட்டு குழுக்களின் அட்டகாகம் அடக்கப்பட்டதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X