2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு; ஐவர் கைது

Freelancer   / 2023 மார்ச் 10 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா - மணியர்குளம் குளப்பகுதியில் இருந்து காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம், பொலிஸாரால் மீட்கப்பட்டது.

வவுனியா - பூவரசங்குளம், மணியர்குளம் குளப்பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் இருப்பதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு நேற்றிரவு (09) தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞனின் சடலத்தில் காயங்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், இது மதுபோதையில் நிகழ்ந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  ஐந்து சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர். 

சம்பவத்தில் பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் யசோதரன் என்ற 28 வயது  குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.

அதேவேளை, குறித்த சடலத்தை பதில் நீதிபதி த.திருவருள் பார்வையிட்டுள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்தில் சடலத்தை பார்வையிட்டார். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .