2023 ஜூன் 07, புதன்கிழமை

கருவாட்டுக் கடையில் திருட்டு

Freelancer   / 2023 மார்ச் 14 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அமைந்துள்ள கருவாடு விற்பனை நிலையத்தில் நேற்று இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கடை உரிமையாளரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வழமை போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடை உரிமையாளர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இன்று காலை வந்து பார்த்தபொழுது கூரை உடைக்கப்பட்டு, கருவாடு திருட்டுப் போய் உள்ளமை தெரிய வந்துள்ளது.

அத்துடன் 30,000/- ரூபா பணமும் பணப்பெட்டியில் இருந்து காணாமல் போய்விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .