2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

வயலுக்குள் பாய்ந்த பஸ்

Freelancer   / 2023 மே 21 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (21) மதியம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் பாய்ந்தது.  அதிஷ்டவசமாக இ.போ.ச.பேருந்து பயணிகள் சேவையில் ஈடுபடாத நிலையில் பேருந்தில்  இ.போ.ச ஊழியர்கள்  ஒரு சிலர் மாத்திரமே பயணித்திருந்தனர்.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பேருந்தை தூக்கி வீதிக்கு கொண்டு வந்தனர்.

குறித்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் பேருந்துக்கு ஏறும் படிகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .