2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

நயினாதீவு திருவிழா பிற்போடப்பட்டது

Niroshini   / 2021 ஜூன் 08 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்த மகோற்சவம், செப்டெம்பர் 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளததாக, கோவில் அறங்காவலர் சபையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகபூசணி அம்மன் கோவிலின் வருடாந்த மகோற்சவம், நாளை மறுதினம் (10) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தது.

இதன்போது, நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மகோற்சவத்தை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடத்த முன்னர் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று (08) காலை அவசரமாக கூடிய கோவில் அறங்காவலர் சபையினர், மகோற்சவத்தை பிற்போட தீர்மனித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .