2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

யாழுக்கு பொலிஸ்மா அதிபர் விஜயம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன, இன்று மதியம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வடக்கு மாகாணத்தில், சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய்வது சம்பந்தமாக, கிளிநொச்சியில், நாளை (14) நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே, பொலிஸ் மா அதிபர், இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.

இதன்போது, வரலாற்று சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோவிலுக்கும்; சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அத்துடன், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தையும், இன்று மாலை சந்திக்கவுள்ள அவர், அதன் பின்னர், காங்கேசன்துறையில் தங்கியிருந்து, நாளை, கிளிநொச்சிக்குப் பயணமாவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாளைய கூட்டத்துக்கு, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .