Niroshini / 2021 நவம்பர் 23 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த், என். ராஜ்
யாழ்ப்பாணம் - கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக, இன்று (23), துப்புரவுப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டுள்ளனர்.
கோப்பாய் துயிலும் இல்லத்தை, இராணுவத்தினர் இடித்தழித்து, பாரிய இராணுவ முகாமை அமைத்து, நிலைகொண்டுள்ளனர். அதனால் துயிலும் இல்லத்துக்கு முன்பாக உள்ள தனியார் காணியில், மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுவது வழமையாகும்.
தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அக்காணியின் முன்பக்கமாக வீதியின் இருமருங்கினையும் துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது , கோப்பாய் பொலிஸார் மற்றும் பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் சிலர், தாமும் துப்புரவுப் பணியில் ஈடுபடுவதாக கூறி, துப்புரவுப் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.
இதேவேளை, இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களும் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்ததுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்தனர்.
14 minute ago
19 minute ago
24 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
24 minute ago
39 minute ago