2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

அச்சுறுத்தலால் கைவிடப்பட்டது போராட்டம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை மற்றும் கிருமிநாசினி இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று (18) காலை, விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உரும்பிராய் கமநல சேவை நிலையத்துக்கு முன்பாக விவசாயிகள் மேற்கொள்ள இருந்த போராட்டத்தை, பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிறுத்தியுள்ளனர்.

அத்துடன், போராட்டத்துக்கு வந்திருந்தவர்களை இராணுவத்தினரும் கோப்பாய் பொலிஸாரும் அச்சுறுத்தியுள்ளனர். அச்சுறுத்தலுக்கு பயந்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு சென்றுள்ளனர்.

சீருடை தரித்தவர்களின் அச்சுறுத்தல் காரணமாக, போராட்டத்தை மேற்கொள்ள முடியாமல் போனதாக, போராட்டத்துக்கு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .