2023 ஜூன் 07, புதன்கிழமை

கொள்ளைக் கும்பல் சிக்கியது

Niroshini   / 2021 டிசெம்பர் 19 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

கோப்பாய் மத்திய பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் நவாலி, மயிலங்காடு, மல்லாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

16ஆம் திகதி இரவு, வீட்டொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள், முகத்தை மறைத்து கத்திமுனையில் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி, அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

இதன் போது 6 இலட்சம் ரூபா பெறுமதியான 5 பவுன் நகைகள் கொள்ளையயடிக்கப்பட்டு இருந்தன.

சம்பவம் தொடர்பில், வீட்டு உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று 12 மணித்தியாலத்துக்குள், சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
அத்துடன், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள், யாழ். மாவட்டத்தின் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள், தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .