2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

கிளைமோர் குண்டு மீட்பு

Niroshini   / 2021 நவம்பர் 21 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது. 

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேலணை, அம்பிகா நகர் பகுதியில், இன்று மாலை 4 மணியளவில், இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் சிறப்புப் பிரிவினரினால் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டு, செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட நிலையில் இந்த கிளைமோர்க் குண்டு  மீட்கப்பட்டுள்ளதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .