2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

மாவீரர் தினத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

Niroshini   / 2021 நவம்பர் 22 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

மாவீரர் தினத்துக்கு தடை கோரி, சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்றத்தில், சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸாரால், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக, தடையுத்தரவு பிறப்பிக்க கோரி, இன்று (22), சாவகச்சேரி நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் யூட்சன், "பெயர் குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பதாலும், இலங்கையின் சட்டம் இயற்றுகின்ற உயரிய சபைகளில் இருப்பதாலும், இலங்கையின் சட்டம் தொடர்பாக தெளிவாக அறிந்திருப்பார்கள்.

"எனவே, அவர்கள் மீது சட்டத்தை மீறுவார்கள் என்ற அடிப்படையில் பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது. ஆனால், பெயர் குறிப்பிட்ட நபர்களும் ஏனையவர்களும் இலங்கையின் சட்டங்களை மீறி ஏதாவது நடவடிக்கைகளை முன்னெடுத்தால், அவர்களை கைது செய்து, மன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.

"அதனால் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, குறித்த நபர்களுக்கு எதிராக தடையுத்தரவை வழங்க முடியாது" என்று தெரிவித்து, குறித்த கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக கூறி, நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கில் பெயர் குறிப்பிட்டவர்கள் சார்பாக, சட்டத்தரணி வி மணிவண்ணன், சட்டத்தரணி சதீஸ்வரன், சட்டத்தரணி குகனேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .