2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். தில்லைநாதன் 

வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி, கோரியடிப்  பகுதியில், இன்று (23) பிற்பகல், மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

 இடைக்காடு - வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த குயின்ரன் உமேஸ் (வயது- 35) என்பவர் உயிரிழந்ததுடன், கட்டைகாட்டைச் சேர்ந்த ஸ்ரானிலேல் ஜெயக்குமார் (வயது-45) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளானார். 

 அப்பகுதியில் மழை பொழிந்ததாகவும் அச்சமயம்  கோரியடிப் பகுதியிலுள்ள வாடியில் நின்றிருந்த  மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .